சிட்னி டெஸ்ட்: இரட்டை சதத்தை தவறவிட்ட புஜாரா... சாதனை சதம் விளாசிய ரிஷாப் பண்ட்!

Report Print Kabilan in கிரிக்கெட்

சிட்னியில் நடந்து வரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர் புஜாரா 7 ஓட்டங்களில் இரட்டை சதத்தை தவறவிட்டார்.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து விளையாடி வரும் இந்திய அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 303 ஓட்டங்கள் எடுத்திருந்தது. புஜாரா 130 ஓட்டங்களுடனும், விஹாரி 39 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இன்று 2ஆம் நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடங்கியது. விஹாரி 42 ஓட்டங்களில் ஆட்டமிழந்த நிலையில், புஜாரா பொறுமையான ஆட்டத்தை கடைபிடித்தார். மறுமுனையில் ரிஷாப் பண்ட் அதிரடி காட்டினார்.

இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட புஜாரா 193 ஓட்டங்களில் இருந்தபோது, லயன் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவரது ஸ்கோரில் 22 பவுண்டரிகள் அடங்கும்.

பின்னர் ரிஷாப் பண்ட் உடன் ஜடேஜா இணைந்தார். இந்த ஜோடியின் அபார ஆட்டத்தினால் இந்திய அணி 500 ஓட்டங்களை கடந்தது. தொடர்ந்து பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய ரிஷாப் பண்ட், 137 பந்துகளில் சதம் விளாசினார். இது அவருக்கு 2வது சர்வதேச சதமாகும்.

இதன்மூலம் அவுஸ்திரேலிய மண்ணில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷாப் பண்ட் படைத்தார்.

மறுமுனையில் ஜடேஜா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது வரை இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 555 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers