கோஹ்லியின் க்ளோஸ், பேட்டின் கிரிப் பிங்க் நிறமாக இருப்பது ஏன் தெரியுமா? வெளியான உண்மை தகவல்

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் கோஹ்லி பிங்க் நிற க்ளோஸ், பேட்டின் கிரிப் பிங்க் நிறத்தில் இருந்தது ஏன் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய அணி சற்று முன் வரை முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 491 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

இந்நிலையில் இப்போட்டியில் கோஹ்லியின் க்ளோஸ், பேட்டின் கிரிப் மற்றும் பேட்டில் இருக்கும் பெயர் போன்றவை வழக்கத்திற்கு மாறாக பிங்க் நிறத்தில் இருந்தது.

இதனால் அதற்கு என்ன காரணம் என்பது குறித்து தெரியவந்துள்ளது.

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத்தின் மனைவி ஜேன் மெக்ராத் மார்பக புற்றுநோயால் கடந்த 2008-ஆம் ஆண்டு இறந்தார்.

இதனால் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு மெல்போர்னில் நடக்கும் டெஸ்ட் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி என்றும் ஜனவரி முதல் வாரத்தில் சிட்னியில் நடக்கும் டெஸ்ட் போட்டி பிங்க் டெஸ்ட் எனவும் அழைக்கப்படுகிறது.

அதாவது அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத்தின் மனைவி ஜேன் மெக்ராத் மார்பக புற்றுநோயால் கடந்த 2008-ஆம் ஆண்டு இறந்தார்.

ஜேன் மெக்ராத் மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த காலத்திலேயே கிளென் மெக்ராத்தும் ஜேனும் சேர்ந்து புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் உதவி செய்வதற்காக மெக்ராத் பௌண்டேஷனை தொடங்கினர்.

அதன் பின் ஜேன் மெக்ராத் மனைவி இறந்துவிட்டதால், 2009-ஆம் ஆண்டு முதல் ஜனவரி முதல் வாரத்தில் சிட்னியில் நடக்கும் போட்டி பிங்க் டெஸ்ட் என்று அழைக்கப்பட்டது.

அந்த போட்டியில் திரட்டப்படும் நிதி, மெக்ராத்தின் பௌண்டேஷனுக்கும் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கும் வழங்கப்படுகிறது.

இதுதான் சிட்னி டெஸ்ட் போட்டி பிங்க் டெஸ்ட் என்று அழைக்கப்பட காரணம். இந்த போட்டியில் ஸ்டம்புகள், பவுண்டரி லைன், ஸ்டேடியம் பேனர்கள் என அனைத்துமே பிங்க் நிறத்தில் இருக்கும்.

இதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவே இந்திய அணியின் தலைவர் கோஹ்லி தனது பேட்டின் க்ளோஸ் பிங்க் நிறத்தில் மாட்டி வந்ததோடு பேட்டின் கிரிப்பும் பிங்க் நிறத்திலே அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers