அடுத்த டி20 உலகக்கோப்பை போட்டியில் இலங்கை அணிக்கு காத்திருக்கும் சவால்! மலிங்கா வேதனை

Report Print Santhan in கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை போட்டி அடுத்து 2020-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில்,

சூப்பர் 12 சுற்றில் நேரடியாகப் பங்குபெறும் தகுதியை இலங்கையும், வங்கதேச அணியும் இழந்துவிட்டதாக ஐசிசி அறிவித்துள்ள ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ஐசிசி விதிமுறைப்படி, டி20 தர வரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் அணிகள் மட்டுமே உலகக்கோப்பை போட்டிக்கு நேரடியாகப் போட்டியில் பங்கேற்க முடியும்.

அந்த வகையில், பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான் அணிகள் மட்டுமே நேரடியாகப் பங்கேற்கின்றன.

கடைசி 9 மற்றும் 10-வது இடங்களில் இலங்கை, வங்கதேசம் அணிகள் உள்ளதால், அந்தணிகள் நேரடியாக பங்கேற்கும் தகுதியை இழந்துள்ளன.

2014-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை சாம்பியன், 3 முறை இறுதிப்போட்டிவரை முன்னேறிய பெருமை கொண்டது இலங்கை அணி.

மேலும் இந்த முறை ஆப்கானிஸ்தான் அணி கூட நேரடியாக தகுதி பெற்றுள்ளதால், இது இலங்கை ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

இது குறித்து இலங்கை அணியின் தலைவர் மலிங்கா கூறுகையில், இந்த முடிவு எங்களுக்கு வேதனை அளிக்கிறது. எங்களால் சூப்பர் 12 பிரிவில் நேரடியாகத் தகுதி பெறமுடியாவிட்டாலும் கூட உலகக்கோப்பையில் சிறப்பாகச் செயல்படுவோம் என்று கூறியுள்ளார்.

2020-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டியில் தகுதி பெறுவதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் இந்த ஆண்டு அக்டோபர் 18-ஆம் திகதி முதல் நவம்பர் 15-ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

அதில் முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள் உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers