அழகான பெண் குழந்தைக்கு தந்தையான ரோஹித் ஷர்மா!

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா-ரித்திகா தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

ரோஹித் ஷர்மா கடந்த 2015ஆம் ஆண்டு ரித்திகா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கிரிக்கெட் போட்டி நடக்கும் இடங்களுக்கு, எப்போதும் தனது மனைவியை அழைத்து செல்வதை ரோஹித் வழக்கமாக கொண்டிருப்பார்.

ஆனால், அவரது மனைவி ரித்திகா கர்ப்பமாக இருந்ததால் ரோஹித்தால் அவுஸ்திரேலிய தொடருக்கு அவரை அழைத்துச் செல்ல முடியவில்லை.

இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான ரித்திகாவுக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த தகவலை கேள்விப்பட்ட ரோஹித் ஷர்மா, மிகுந்த மகிழ்ச்சியடைந்து சக வீரர்களிடம் இதனை பகிர்ந்து கொண்டார். அதன் பின்னர் அவர் உடனடியாக தனது குழந்தையைக் காண மும்பைக்கு திரும்ப உள்ளார்.

இதன் காரணமாக, ரோஹித் வரும் 3ஆம் திகதி தொடங்கும் நான்காவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார். அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா களமிறங்குவார் என்று கூறப்படுகிறது. தந்தையான ரோஹித் ஷர்மாவுக்கு சக வீரர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்