சர்வதேச போட்டிகளில் புதிய சாதனை படைத்த கோஹ்லி! எதில் தெரியுமா?

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி தொடர்ந்து 3வது ஆண்டாக சர்வதேச போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.

விராட் கோஹ்லி இந்த ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் தொடர், தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர், அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் சதம் அடித்து அசத்தினார்.

அதன்படி பார்க்கும்போது, 2018ஆம் ஆண்டில் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய 3 வகையான போட்டிகளிலும் சேர்த்து 2, 653 ஓட்டங்கள் சாதனை படைத்துள்ளார்.

இந்த ஆண்டு கோஹ்லியின் துடுப்பாட்ட சராசரி 69.81 ஆகும். ஏற்கனவே, கடந்த 2016ஆம் ஆண்டில் 2,595 ஓட்டங்களும், 2017ஆம் ஆண்டில் 2,818 ஓட்டங்களும் கோஹ்லி எடுத்திருந்தார்.

இதன்மூலம் அவர் தொடர்ந்து 3வது ஆண்டாக அதிக ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். மேலும், வெளிநாடுகளில் அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன் என்ற கங்குலியின் சாதனையை, மெல்போர்ன் வெற்றி மூலம் சமன் செய்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்