அவுஸ்திரேலியா தொடரில் அசத்திய ரிசப் பாண்ட்! அதிக கேட்சுகள் பிடித்து சாதனை

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் அதிக கேட்சுகள் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிசப் பாண்ட் படைத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 3 டி20, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகின்றது.

இதில் 3 டெஸ்ட் போட்டிகள் முடிவில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கின்றது.

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் டோனி கேட்ச் பிடிப்பதில் சிறப்பான சாதனையை படைத்துள்ளார்.

அவர் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக கேட்சுகளைப் பிடித்த கீப்பர் என்ற பெருமையை மட்டுமல்லாமல், அறிமுக ஆண்டிலேயே அதிக கேட்சுகளைப் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

தற்போது நடைப்பெற்று வரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 20 கேட்சுகளைப் பிடித்துள்ளார்.

இன்னும் ஒரு போட்டி உள்ள நிலையில் அசைக்க முடியாத முதலிடத்தை பிடித்து அதிக கேட்சுகளைப் பிடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையில் முதலிடத்தில் நீடிப்பார் என தெரிகிறது.

சர்வதேச அளவில் அவுஸ்திரேலியா கீப்பர் பிராட் ஹாடின் ஒரு டெஸ்ட் தொடரில் 29 கேட்சுகளை பிடித்து சர்வதேச அளவில் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...