88 ஆண்டுகளில் முதல்முறை.. இலங்கையை 423 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து!

Report Print Kabilan in கிரிக்கெட்

இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 423 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.

அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 178 ஓட்டங்கள் எடுத்தது. அதன் பின்னர் ஆடிய இலங்கை 104 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் 2வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி டாம் லாதம்(176), ஹென்றி நிக்கோலஸ்(162) ஆகியோரின் அபார ஆட்டத்தினால் 4 விக்கெட் இழப்புக்கு 585 ஓட்டங்கள் குவித்தது.

இதன்மூலம் இலங்கை அணிக்கு 660 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 231 ஓட்டங்கள் எடுத்திருந்தது. தில்ரூவர்ன் பெரேரா 22 ஓட்டங்களுடனும், லக்மல் 16 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் கடைசி நாளான இன்று இலங்கை அணி துடுப்பாட்டத்தை தொடங்கியது. லக்மல் 18 ஓட்டங்களில் போல்ட் பந்தில் அவுட் ஆனார். அதன் பின்னர் பெரேரா(22), சமீரா(3) மற்றும் லஹிரு குமார ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இலங்கை அணி 236 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ரிடையர்டு ஹர்ட் முறையில் வெளியேறிய மேத்யூஸ் களமிறங்கவில்லை.

AFP

இதன்மூலம் நியூசிலாந்து அணி 423 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் தொடரையும் 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றிய டிரெண்ட் போல்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இலங்கை அணிக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம் இந்த தொடரை வென்றதன் மூலம், நியூசிலாந்து அணி தொடர்ச்சியாக 4 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது. இதன்மூலம் தொடர்ச்சியாக 4 டெஸ்ட் தொடர்களை நியூசிலாந்து அணி வெல்வது, அந்த அணியின் 88 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.

நியூசிலாந்து அணி ஏற்கனவே மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

AP
Gallo Images

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்