கிண்டல் செய்த அவுஸ்திரேலிய வீரரை அற்புதமாக கேட்ச் பிடித்து வெளியேற்றிய பாண்ட்! வெளியான வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப்பாண்டை அவுஸ்திரேலியா அணியின் தலைவர் டிம் பெய்ன் கிண்டல் செய்யும் வகையில் பேசியிருந்த நிலையில், பாண்ட் அவரை தன்னுடைய அற்புதமான கேட்ச் மூலம் வெளியேற்றியுள்ளார்.

மெல்போர்னில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போடியில் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 443 ஓட்டங்கள் எடுத்து டிக்ளர் செய்தது.

அதன் பின் ஆடிய அவுஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 151 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கிய இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 106 ஓட்டங்கள் எடுத்து டிக்ளர் செய்தது.

இதனால் அவுஸ்திரேலியா அணிக்கு 399 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் அவுஸ்திரேலியா அணி, இந்திய வீரர்களின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 258 ஓட்டங்கள் எடுத்து,141 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.

இந்நிலையில் இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் டிம்பெய்ன் இந்திய அணியின் இளம் வீரர் பாண்ட் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது, கிண்டல் செய்தார்.

அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தை டிம் பெய்ன் துடுப்பெடுத்தாடிய போது, பந்தானது பேட்டில் பட்டு ரிஷப்பாண்டிடம் சென்றது.

ஆனால் சற்று அசந்தால் கூட, அந்த கேட்சை பிடிக்க முடியாது. பாண்ட் தன்னுடைய துல்லியமான மற்றும் அற்புதமான கேட்ச் மூலம் டிம் பெய்னை வெளியேற்றியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்