மெல்போர்ன் மைதானத்தில் இந்திய ரசிகர்கள் மீது இனவெறி தாக்குதல்!

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டியில் ரசிகர்கள் இனவெறியை தூண்டும் விதமாக பேசியதாக சர்ச்சை வெடித்துள்ளது.

இந்தியா, அவுஸ்திரேலியா அணிகள் தலா ஒரு டெஸ்டில் வெற்றி பெற்று சமநிலையில் இருக்கும் நிலையில், 3வது டெஸ்ட் போட்டி கடந்த 26ம் திகதி மெல்போர்னில் தொடங்கியது.

இந்த போட்டியிலும் வீரர்களுக்கிடையே ஸ்லெட்ஜிங் யுத்தங்கள் தொடர்ந்து நிலையில் ரசிகர்களுக்கு இடையேயும் வார்த்தை போர் நடந்து வருகிறது.

அதாவ இந்திய ரசிகர்கள் மீது இனவெறியை தூண்டும் விதமாக அவுஸ்திரேலியா ரசிகர்கள் பேசியதாக புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பான மைதான நிர்வாகத்துக்கும், அவுஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகத்துக்கும் புகார்கள் செல்ல உடனடியாக ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் மூன்றாவது நாளிலும் இதே தொடர, வீடியோவை அடிப்படையாக கொண்டு அந்த பகுதியில் இருந்த ரசிகர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதுகுறித்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், இனவாத கருத்துகளை அவுஸ்திரேலியா நிர்வாகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது, ரசிகர்கள், வீரர்கள், மைதான நிர்வாகிகள் என யார் மீது கூறினாலும் நடவடிக்கை எடுக்கப்படும், ரசிகர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்