இதனை செய்தால் தான் உலகக் கிண்ண அணியில் இடம்.. வார்னர்- ஸ்மித்திற்கு அவுஸ்திரேலிய வாரியம் நிபந்தனை!

Report Print Kabilan in கிரிக்கெட்

டி20 லீக் தொடரில் சிறப்பாக விளையாடினால் தான் உலகக் கிண்ண அவுஸ்திரேலிய அணியில் வார்னர் மற்றும் ஸ்மித்திற்கு இடம் கிடைக்கும் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் மற்றும் வார்னருக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஓர் ஆண்டு தடை விதித்துள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த தடைக்காலம் முடிவுக்கு வரும்.

தடை காரணமாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாததால், இருவரும் உள்ளூர் டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றனர். அத்துடன் வங்கதேச பிரிமியர் லீக், ஐ.பி.எல் தொடரிலும் இவர்கள் களம் காண உள்ளனர்.

இந்நிலையில் இந்த தொடர்களில் வார்னர் மற்றும் ஸ்மித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் தான், உலகக் கிண்ண தொடருக்கான அவுஸ்திரேலிய அணியில் இடம் கிடைக்கும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

AFP

இதுதொடர்பாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் செயல் தலைவர் கெவின் ராபர்ட்ஸ் கூறுகையில்,

‘வங்கதேச பிரிமியர் லீக் லீக் மற்றும் ஐ.பி.எல் தொடரில் இருவருடைய ஆட்டம் எப்படி இருக்கிறது என்பது உண்மையிலேயே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இரு தொடர்களையும் கண்காணிப்பது முக்கியமானது.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துதல், நியாயம் மற்றும் நீதி ஆகியவற்றின் அடிப்படையில் எங்களுடைய தேர்வு இருக்கும். எந்தவித பிரச்சனையும் இல்லாமல் அவர்கள் அணிக்கு திரும்ப வேண்டும் என்பதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.

இருவருடைய பார்ம் குறித்து நாங்கள் கேட்டறிந்த வகையில் எந்த கவலையும் இல்லை. அவர்கள் தொடர்ந்து வலைப்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்பது தான் எங்களது நோக்கம். அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் அவர்களுடன் போதுமான அளவிற்கு தொடர்பு கொண்டு அவர்களை மதிப்பிடுவோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers