39 ஆண்டுகால வரலாற்று சாதனையை முறியடித்த பும்ரா

Report Print Kabilan in கிரிக்கெட்

அறிமுக ஆண்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையை பும்ரா படைத்துள்ளார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, மெல்போர்னில் நடைபெற்று வரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் 33 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதன்மூலம் அறிமுக ஆண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். பும்ரா இந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார்.

அதன் பின்னர் அந்த அணிக்கு எதிராகவும், இங்கிலாந்து, அவுஸ்திரேலியாவிலும் ஐந்து விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் இந்த நாடுகளில் ஒரே ஆண்டில் 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய ஆசிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்த ஆண்டில் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா 45 விக்கெட்டுகளை வீழ்த்தி, 39 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.

AFP

இதற்கு முன்பு கடந்த 1979ஆம் ஆண்டு திலீப் தோஷி தனது அறிமுக டெஸ்ட் ஆண்டில் 40 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அத்துடன் அவுஸ்திரேலிய மண்ணில் சிறப்பான பந்துவீச்சு என்ற பெருமையையும் பும்ரா பெற்றுள்ளார்.

அறிமுக டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர்கள்
  • பும்ரா - 45 விக்கெட்(2018)
  • திலீப் தோஷி - 40 விக்கெட் (1979)
  • வெங்கடேஷ் பிரசாத் - 37 விக்கெட் (1996)
  • ஹிர்வானி - 36 விக்கெட் (1988)
  • ஸ்ரீசாந்த் - 35 விக்கெட் (2006)

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers