இலங்கை அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட இமாலய இலக்கு

Report Print Kabilan in கிரிக்கெட்

கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், இலங்கை அணிக்கு 660 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கினை நியூசிலாந்து நிர்ணயித்துள்ளது.

இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 178 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் இலங்கை அணி 104 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் ராவல் 74 ஓட்டங்களும், டாம் லாதம் அபாரமாக ஆடி 176 ஓட்டங்களும் குவித்தனர். பின்னர் வந்த வில்லியம்சன்(48), டெய்லர்(40) ஆகியோர் கணிசமான ஓட்டங்களை எடுத்து வெளியேறினர்.

AP

அவர்களை தொடர்ந்து களமிறங்கிய நிக்கோலஸ், கிராண்ட்ஹோம் ஆகியோரின் அபார ஆட்டத்தினால் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 585 ஓட்டங்கள் குவித்தது. நிக்கோலஸ் 162 ஓட்டங்களுடனும், கிராண்ட்ஹோம் 71 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவிக்கப்பட்டது.

இதன்மூலம் இலங்கை அணிக்கு 660 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் ஆடிய இலங்கை அணி 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 24 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

தொடக்க வீரர்கள் குணதிலகா(4), கருணரத்னே(0) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் அவுட் ஆகினர். சண்டிமல் 14 ஓட்டங்களுடனும், குசால் மெண்டிஸ் 6 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers