அவுஸ்திரேலிய அணிக்கு தொல்லை கொடுத்த புஜாரா: போல்டாக்கி வெளியேற்றிய பேட் கம்மின்ஸ் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து தொந்தரவு கொடுத்த புஜாராவை, அவுஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் தன்னுடைய அற்புதமான பந்து வீச்சின் மூலம் போல்டாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்பர்னலில் நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 443 ஓட்டங்கள் எடுத்த போது டிக்ளர் செய்வதாக அறிவித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸ் துவங்கிய அவுஸ்திரேலியா அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 8 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் இப்படி ஒரு நல்ல ஓட்டத்தை எடுத்தற்கு முக்கிய காரணம் சட்டீஸ்வர் புஜாரா தான், இவர் சதமடித்து 106 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

இருப்பினும் இவர் அவுஸ்திரேலியா அணிக்கு கடும் தொல்லை கொடுத்ததால், அவரை அவுட்டாக்க முடியாமல் திணறினர்.

இருப்பினும் புஜாரா தன்னுடைய நிதான ஆட்டத்தால் சதமடித்தார். இப்படி அவுஸ்திரேலியா அணிக்கு தொல்லை கொடுத்த புஜாராவை, அந்தணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் தன்னுடைய அற்புதமான பந்து வீச்சின் மூலம் போல்டாக்கியுள்ளார்,

அந்த பந்தை எதிர்கொண்ட புஜாரா ஒன்றுமே செய்யமுடியாமல், போல்டாகி வெளியேறிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers