நீங்கள் சிக்ஸர் அடித்தால் மும்பைக்கு மாறிவிடுகிறேன்! ரோகித்சர்மாவை கிண்டலடித்த அவுஸ்திரேலியா வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ரோகித்சர்மாவை கிண்டல் செய்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 437 ஓட்டங்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது. அதன் பின் முதல் இன்னிங்ஸ் ஆடி வரும் அவுஸ்திரேலியா அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 ஓட்டங்களுக்கு விக்கெட் இழப்பின்றி ஆடி வருகிறது.

இந்நிலையில் இப்போட்டியில் அவுஸ்திரேலியா அணியின் பந்து வீச்சை இந்திய அணி எளிதாக சமாளித்து வந்த்தால், அந்தணியினரால் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை.

இதனால் இந்திய வீரர்களை சீண்டினர். அப்படி அவுஸ்திரேலியா அணியின் தலைவர் பெய்ன், ரோகித்சர்மாவை சீண்டிய வீடியோ வைரலாகி வருகிறது.

அதில், நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த ரோஹித் சர்மாவிடம் ஆஸ்திரேலிய கேப்டனும் அந்த அணியின் விக்கெட் கீப்பருமான பெய்ன் ரோஹித் நீங்கள் சிக்ஸ் அடித்தால் நான் மும்பைக்கு மாறிவிடுகிறேன் என்று கூறிச் சிரிக்கிறார்.

ஆனால் ரோகித் இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers