டிராவிட்டின் 16 ஆண்டுகால சாதனையை தகர்த்தெறிந்த கோஹ்லி! எதில் தெரியுமா?

Report Print Kabilan in கிரிக்கெட்

மெல்போர்னில் நடந்து வரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி 16 ஆண்டுகளுக்குப் பின் புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 215 ஓட்டங்கள் சேர்த்திருந்த இந்திய அணி, இன்று 2ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.

நேற்றைய தினம் 47 ஓட்டங்கள் எடுத்திருந்த கோஹ்லி, இன்று மீண்டும் தனது ஆட்டத்தை தொடர்ந்தார். அரைசதம் விளாசிய அவர் ஸ்டார்க் பந்துவீச்சில் 82 ஓட்டங்களில் அவுட் ஆனார். இதன்மூலம் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக ஓட்டங்கள் குவித்த டிராவிட்டின் சாதனையை முறியடித்தார்.

கடந்த 2002ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் 1,137 ஓட்டங்கள் எடுத்ததே இதுவரை சாதனையாக இருந்து வந்தது. இந்நிலையில் கோஹ்லி 1,138 ஓட்டங்கள் எடுத்து 16 ஆண்டுகால சாதனையை தகர்த்துள்ளார். இவர்களுக்கு அடுத்த இடங்களில் அமர்நாத்(1,065), சுனில் கவாஸ்கர்(918) ஆகியோர் உள்ளனர்.

REUTERS

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers