மீண்டும் பூதாகரமாகும் சர்ச்சை... அவர்கள் கொடுத்த அழுத்தம் தான் காரணம்! ஸ்டீவ் ஸ்மித் பரபரப்பு விளக்கம்

Report Print Kabilan in கிரிக்கெட்

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தங்களை தூண்டியது யார் என்பது குறித்து அவுஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் விளக்கமளித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம், கேப்டவுனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய இளம் வீரர் பான் கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தியதாக சிக்கினார்.

அவருக்கு உடந்தையாக இருந்த ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு தலா ஓர் ஆண்டும், பான் கிராஃப்ட்டுக்கு 9 மாதங்களும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் பந்தை சேதப்படுத்த தன்னை தூண்டியது டேவிட் வார்னர் தான் என்று பான் கிராஃப்ட் பகிரங்கமாக தெரிவித்தார். இது அவுஸ்திரேலிய கிரிக்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஸ்டீவன் ஸ்மித் தற்போது மற்றொரு பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

AFP

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘நவம்பர் 2016, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஹோபார்ட் டெஸ்ட்டில் தோல்வியடைந்தவுடன், வீரர்கள் அறைக்கு வந்த கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், ஜேம்ஸ் சதர்லேண்ட், பாட் ஹோவர்ட் ஆகியோர் வெற்றி பெறவே உங்களுக்கு சம்பளம். வெறுமனே விளையாட மட்டுமல்ல என்று கூறினர்.

இது சிறிது ஏமாற்றத்தை அளித்தது. யாரும் தோற்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு களமிறங்குவதில்லை. இப்போதைக்கு அணியின் கேப்டனாக வேண்டும் என்ற எண்ணமெல்லாம் எனக்கு இல்லை. மீண்டும் அவுஸ்திரேலியாவுக்காக ஆட வேண்டுமென்பதே பிரதானம்.

டிம் பெய்ன் தலைமையின் கீழ் ஆடவும் விருப்பமாகவே இருக்கிறேன். உலகக் கிண்ணத்தில் பிஞ்ச் தலைமையில் ஆடவும் விரும்புகிறேன். இப்போதைக்கு இதுதான் என் குறிக்கோள் அதை நோக்கித்தான் ஆடிக்கொண்டிருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers