மைதானத்தில் தாறு மாறாக எகிறிய பந்து..ஒன்றுமே தெரியாமல் சிரித்த கோஹ்லி-ஸ்டார்க் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

மெல்பர்னில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஸ்டார்க் வீசிய பந்து மைதானத்தில் பட்ட வேகத்தில் மேல எகிறிச் சென்றதால், இதைக் கண்ட கோஹ்லி என்ன என்பது போல் சிரித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்பர்னில் நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 215 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

இந்நிலையில் இப்போட்டியின் 87-வது ஓவரை அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க், கோஹ்லிக்கு வீசினார்.

அப்போது பந்தை எதிர்கொண்ட கோஹ்லி, தடுத்தாடாமல் கீப்பருக்கு வீட்டார். ஆனால் பந்தானது மைதானத்தில் பட்ட வேகத்தில் தாறு மாறாக பவுன்சர் ஆகி கீப்பரையும் தாண்டி பவுண்டரி எல்லை கோட்டிற்கு சென்றது.

இதனால் இதைக் கண்ட கோஹ்லி-ஸ்டார்க் இருவரும் என்னடா மைதானம் இது என்பது போல் சிரித்துக் கொண்டனர். அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers