சுரங்கா லக்மலின் அசுர வேகத்தில் 178 ஓட்டங்களுக்கு சுருண்ட நியூசிலாந்து!

Report Print Kabilan in கிரிக்கெட்

கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வரும் டெஸ்டில் இலங்கை வீரர் லக்மலின் அபார பந்துவீச்சில் நியூசிலாந்து அணி 178 ஓட்டங்களுக்கு சுருண்டுள்ளது.

இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்கியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.

அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜீத் ராவல், டாம் லாதம் களமிறங்கினர். இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் சுரங்கா லக்மலின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இருவரும் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். பின்னர் வந்த கேப்டன் கேன் வில்லியம்சனை 2 ஓட்டங்களில் லக்மல் வெளியேற்றினார்.

AP

அதன் பின்னர் வந்த நிக்கோல்ஸின் ஸ்டம்பை லக்மல் சிதறடித்தார். இதனால் நியூசிலாந்து அணி 36 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. எனினும் வாட்லிங் 46 ஓட்டங்கள் எடுத்தார்.

தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில், டிம் சவுதி மட்டும் அதிரடியாக ஆடி 65 பந்துகளில் 3 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 68 ஓட்டங்கள் குவித்தார். இதன்மூலம், ஓரளவு நல்ல ஸ்கோரை நியூசிலாந்து எட்டியது. லஹிரு குமாரா 3 விக்கெட்டுகளை வீழ்த்த நியூசிலாந்து அணி 178 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அதன் பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. குணதிலகா(8), கருணரத்னே(7), சண்டிமல்(6) ஆகியோர் ஒற்றை இலங்க ஒட்டங்களில் அவுட் ஆகினர்.

பின்னர் வந்த குசால் மெண்டிஸ் 15 ஓட்டங்களில் கிராண்ட்ஹோம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இலங்கை அணி முதல் நாள் முடிவில் 32 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 88 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

ஏஞ்சலோ மேத்யூஸ் 27 ஓட்டங்களுடனும், ரோஷன் சில்வா 15 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் டிம் சௌதி 3 விக்கெட்டுகளும், கிராண்ட்ஹோம் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers