ஒரே டெஸ்ட் போட்டியில் 10 சாதனைகளை காலி செய்ய காத்திருக்கும் கோஹ்லி! அவுஸ்திரேலியா தடுக்குமா?

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கோஹ்லி சிறப்பான ஆட்டத்தை கொடுத்தால், அவர் 10 சாதனைகளை முறியடிக்கவுள்ளார்.

இந்திய அணி இந்தாண்டு வெளிநாட்டு மண்ணில் சொதப்பினாலும், கோஹ்லி வெளிநாட்டு மண்ணில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை கொடுத்து வருகிறார்.

தென்னாப்பிரிக்காவில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த கோஹ்லி, இங்கிலாந்திலும் அதிக ஓட்டங்கள் குவித்தார்.

இதைத் தொடர்ந்து கோஹ்லி தற்போது அவுஸ்திரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை கொடுத்து வருகிறார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்த கோஹ்லி, 25-வது சதத்தை பதிவு செய்தார்.

இந்நிலையில் அவுஸ்திரேலியா அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கோஹ்லி நிறைய சாதனைகளை முறியடிக்கவுள்ளார்.

ஓராண்டில் வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் அதிக ஓட்டங்கள் குவித்த இந்திய வீரர்களில் ராகுல் டிராவிட் முதலிடத்தில் உள்ளார்.

2002-ஆம் ஆண்டு வெளிநாடுகளில் 1137 ரன்களை குவித்துள்ளார் ராகுல் டிராவிட். இந்த ஆண்டில் கோஹ்லி இதுவரை வெளிநாடுகளில் 1065 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதனால் அவுஸ்திரேலியா அணிக்கெதிரான மூன்றாவது போட்டியில் 82 ஓட்டங்கள் குவித்தால் ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடிக்கலாம்.

கோஹ்லி இந்த போட்டியில் 156 ஓட்டங்கள் குவித்தால் வெளிநாட்டில் ஓராண்டில் அதிக ஓட்டங்கள் குவித்த கேப்டன் என்ற சாதனையை படைக்கலாம். 2008-ஆம் ஆண்டு 1212 ஓட்டங்களை குவித்த தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் தான் முதலிடத்தில் உள்ளார். இன்னும் 156 ஓட்டங்கள் அடித்தால் ஸ்மித்தின் சாதனையை கோஹ்லி முறியடித்துவிடுவார்.

மெல்போர்ன் டெஸ்டில் ஒரு சதம் அடித்தால் 26 சதங்களுடன் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கேரி சோபர்ஸின் டெஸ்ட் சத சாதனையை சமன் செய்வார். ஒருவேளை இரண்டு சதமடித்துவிட்டால், 27 சதங்களுடன் ஆலன் பார்டர், கிரீம் ஸ்மித் ஆகியோரை சமன் செய்வார்.

மெல்போர்ன் டெஸ்டில் கோஹ்லி சதமடித்தால், ஓராண்டில் அதிக சதமடித்த வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கருடன் பகிர்ந்துகொள்வார்.

1998-ஆம் ஆண்டு சச்சின் 12 சதங்களை விளாசினார். தற்போது கோஹ்லி இந்த ஆண்டில் மட்டும் 5 டெஸ்ட் சதங்கள், 6 ஒருநாள் சதங்களுடன் 11 சதங்களை விளாசியுள்ளார். எனவே இன்னும் ஒரு சதமடித்தால் சச்சினை சமன் செய்துவிடுவார்.

ஒரு சதத்தின் மூலம் அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக அதிக சதமடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 8 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் கவாஸ்கருடன் அந்த இடத்தை கோஹ்லி பகிர்வார். இந்த பட்டியலில் 11 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்

அதேபோல ஒரு சதமடித்தால், அவுஸ்திரேலியாவில் அதிக சதமடித்த கேப்டன் என்ற சாதனையையும் கோஹ்லி படைப்பார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers