விராட் கோஹ்லி ஒரு அற்புதமான வீரர்! அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் புகழாரம்

Report Print Kabilan in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், ஐ.பி.எல் தொடரில் விராட் கோஹ்லி தலைமையின் கீழ் விளையாடுவது அற்புதமானது என தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவராக இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி செயல்பட்டு வருகிறார். இதே அணியில் அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விளையாடியுள்ளார்.

இந்நிலையில் விராட் கோஹ்லி குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘ஐ.பி.எல் தொடரில் விராட் கோஹ்லி தலைமையின் கீழ் விளையாடுவது அற்புதமானது.

உண்மையிலேயே அவர் ஒரு அற்புதமான வீரர். அவுஸ்திரேலியா தொடரில் தற்போது விளையாடி வரும் ஆட்டத்தை வெளிப்படுத்தினால், இந்தியா உச்ச நிலையை அடையும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...