தமிழக வீரர் முரளி விஜய்- கே.எல் ராகுல் அதிரடி நீக்கம்! மெல்போர்ன் டெஸ்ட்டுக்கான இந்திய அணி அறிவிப்பு

Report Print Kabilan in கிரிக்கெட்

மெல்போர்னில் நாளை தொடங்கும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்டில், தமிழக வீரர் முரளி விஜய் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் இந்திய அணியில் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகள் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. ஏற்கனவே 2 போட்டிகள் முடிந்த நிலையில் இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இதனால் நாளை தொடங்கும் 3வது டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்நிலையில், மெல்போர்ன் டெஸ்ட்டுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சொதப்பி வரும் முரளி விஜய், கே.எல்.ராகுல் இருவரும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு பதிலாக மயங்க் அகர்வால், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஹர்த்திக் பாண்டியாவுக்கும் இந்தப் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

அவர் 4வது டெஸ்டில் களமிறங்குவார் என தெரிகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வாலுடன், ஹனுமா விஹாரி களமிறங்க உள்ளார்.

இந்திய அணி விபரம்
 • விராட் கோஹ்லி
 • அஜிங்கயே ரஹானே
 • ரோஹித் ஷர்மா
 • ரிஷாப் பண்ட்
 • ரவீந்திர ஜடேஜா
 • மயங்க் அகர்வால்
 • ஹனுமா விஹாரி
 • சட்டீஸ்வர் புஜாரா
 • முகமது ஷமி
 • இஷாந்த் ஷர்மா
 • ஜஸ்பிரித் பும்ரா

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்