கோஹ்லிக்கு மோசடி கேட்ச் பிடித்த ஹேண்ட்ஸ்கம்ப் அதிரடி நீக்கம்? அவுஸ்திரேலிய அணியில் முக்கிய மாற்றம்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியில் முக்கிய மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையே டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையே நடைபெற்று முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 1-1 என்று இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.

இதையடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 26-ஆம் திகதி மெல்போர்னில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டிக்கான அவுஸ்திரேலியா அணியில், ஹேண்ட்ஸ்கம்ப்புக்குப் பதிலாக ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷை அணியில் கொண்டு வர அவுஸ்திரேலியா தீவிரமாக பரீசிலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்து பெரிய இன்னிங்ஸ் மற்றும் அவுஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 326 ஓட்டங்களை நோக்கி அச்சுறுத்தலாகச் சென்று கொண்டிருந்த விராட் கோஹ்லிக்கு தரையில் பட்டு கேட்ச் எடுத்து விட்டு கேட்சை பிடித்து விட்டதாக மோசடி செய்து இந்திய தோல்விக்கு பெரும்பங்கு காரணமாக ஹேண்ட்ஸ்கம்ப் அமைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers