அன்று சக்கர நாற்காலியில் வலம் வந்தவர்! இன்று கோடிகளுக்கு விலைபோன ஆச்சரியம்-- யார் அவர்?

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் பிரபலமான முன்னணி வீரர்களை விடவும் அதிகம் ஜொலித்தவர்கள் என்றால் இளம் வீரர்கள் தான்.

அவர்களில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த அணி வீரரான நிக்கோலஸ் பூரனை சொல்லலாம்.

75 லட்ச ரூபாயில் தொடங்கி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ரூ.4.2 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

டிரினிடாட் பகுதியை சேர்ந்த இவர், கடந்த 2013ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் இணைந்து சாதனைகள் பல புரிந்தார்.

இச்சூழலில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கார் விபத்தொன்றில் சிக்கி, கணுக்கால் மற்றும் முழங்காலில் காயம் ஏற்பட்டு மறுபடியும் கிரிக்கெட் போட்டியே விளையாட முடியாத நிலைக்கு ஆளானார்.

இரண்டு அறுவைசிகிச்சைகளுக்கு பின்னர், ஆறு மாதங்கள் சக்கர நாற்காலியுடன் வலம் வந்தவர், விடாமுயற்சியில் நடைப்பயிற்சி மேற்கொண்டு மீண்டும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார்.

விபத்திலிருந்து மீண்டு வந்தவருக்கு, மற்றொரு சோதனை காத்திருந்தது, அதாவது 2016- 17ம் ஆண்டுக்கான வங்கதேச பிரீமியர் லீக்கில் கலந்து கொண்டதால், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் இவரை தடை செய்தது.

இதனால் கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் கூட பங்குபெறமுடியாமல் போனது, 10 மாத தடைக்கு பின்னர் மீண்டு வந்தவர் மேற்கிந்திய தீவுகள் அணியில் இடம்பிடித்து ஜொலிக்கத் தொடங்கினார், பல தடைகளை தாண்டி விடாமுயற்சியாய் போராடியதன் விளைவே இன்று அவர் பல கோடிகளுக்கு விலைபோக காரணமாய் இருந்தது எனலாம்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers