மெல்போர்ன் டெஸ்டில் அஸ்வின் களமிறங்குவாரா? பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விளக்கம்

Report Print Kabilan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில், அஸ்வின் களமிறங்குவது குறித்து அடுத்த 2 நாட்களில் முடிவு செய்யப்படும் என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

மெல்போர்னில் வரும் 26ஆம் திகதி இந்தியா-அவுஸ்திரேலியா அணிகள் 3வது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. தொடக்க வீரர்கள் சொதப்புவது இந்திய அணிக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், சுழற்பந்து வீச்சாளரின் தேவையும் உள்ளது. இதனால் மெல்போர்ன் போட்டிக்கான இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்படுவாரா என்ற சந்தேகம் நிலவி வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,

‘அஸ்வினை பொறுத்தவரை, இன்னும் 2 நாட்களுக்கு அவரை நன்கு கவனித்து மதிப்பீடு செய்ய உள்ளோம். ரோஹித் ஷர்மா நலமாக உள்ளார். அவர் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளார்.

ஆனால், நாளை அவர் எப்படி இருப்பார் என்பதை பார்க்க வேண்டும். இன்றைய நிலையில் அவர் நன்றாக உள்ளார். பாண்டியா முழு உடற்தகுதியுடன் உள்ளார். அது கூடுதல் ஒரு வாய்ப்பை தரும். காயத்துக்குப் பிறகு அவர் நிறைய முதல்தர போட்டிகளில் விளையாடவில்லை.

ஒரே ஒரு போட்டியில் தான் விளையாடியுள்ளார். அதனால், அவர் விளையாடுகிறாரா இல்லையா என்பதை முடிவு செய்யும்போது நாங்கள் கவனமாக இருக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers