டோனிக்கு இப்படி ஒரு வெறித்தனமான ரசிகரா? வைரலாகும் புகைப்படம்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனியின் ரசிகர் ஒருவர் செய்த செயல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், நட்சத்திர வீரருமான டோனிக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் ரசிகர்கள் இருக்கின்றனர்.

அந்த வகையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டோனியின் ரசிகர் ஒருவர், தனது கார் நம்பர் பிளேட்டில் MS Dhoni என எழுதியுள்ளார்.

இதை ஒருவர் புகைப்படம் எடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் டுவிட்டர் பக்கத்திற்கு டேக் செய்து பகிர்ந்துள்ளார்.

அதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், லாஸ் ஏஞ்சல்ஸில் சொப்பன சுந்தரி என பகிர்ந்துள்ளது.

இந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. டோனி இந்தியாவுக்கு மூன்று வகை உலகக் கோப்பைகளை வென்று கொடுத்ததோடு, ஐபிஎல் தொடரில் 3 முறை சென்னை அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த பெருமையை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers