இந்திய அணியை வீழ்த்த அவுஸ்திரேலியாவின் வியூகம்: அது அவர்களுக்கே ஆப்பாகும் என வாகன் எச்சரிக்கை

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியை வீழ்த்துவதற்கு இரண்டாவது டெஸ்ட் போட்டி வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக மைதானம் அமைக்கப்படுவதால், அது அவுஸ்திரேலிய அணிக்கே ஆபத்தாகிவிடும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கல் வாகன் கூறியுள்ளார்.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்றது. இதில் இந்திய அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெறவுள்ளது.

இந்த மைதானம் அவுஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக, ஆடுகள பரமாரிப்பாளர் தயார் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

முதல் டெஸ்டில் எதிர்பார்த்த அளவு சோபிக்காத மிட்சல் ஸ்டார்க்கிற்கு, ஜான்சன் உள்ளிட்ட பல முன்னாள் பந்து வீச்சாளர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கல் வாகன், இங்கிலாந்தில் செயல்பட்டதைவிட, தற்போது அவுஸ்திரேலியாவில் பங்கேற்கும் இந்திய பந்து வீச்சாளர்களிடம் பெரிய அளவில் மாற்றம் தெரிகிறது.

அவர்கள் அவுஸ்திரேலியா பந்து வீச்சாளர்களை விட சிறப்பாக செயல்படுகிறார்கள். இதனால் அவுஸ்திரேலியா அணி எச்சரிக்கையாக விளையாடுவது நல்லது, அதை விடுத்து மைதானத்தை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக வீசி, தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers