இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் பெயர் அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்

Report Print Raju Raju in கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜான் லீவிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுநாள் வரை இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக இருந்த திலன் சமரவீரா அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திகா ஹத்ருசின்ஹா தான் சமரவீராவை முன்னர் தேர்வு செய்தார் என்பது முக்கிய விடயமாகும்.

இங்கிலாந்து அணிக்காக பல முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள லீவிஸ் இதற்கு முன்னர் துர்ஹம் கவுண்டி கிரிக்கெட் கிளப்பின் தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார்.

2019ஆம் ஆண்டு உலக கிண்ண தொடர் வரை லீவிஸ் இப்பொறுப்பில் நீடிப்பார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers