அவுஸ்திரேலிய அணிக்கெதிரான 2வது டெஸ்டில் அதிரடி மாற்றம்: ரோகித், அஸ்வின் நீக்கம்

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய அணிக்கெதிராக நடைபெற உள்ள 2வது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக ரோகித், அஸ்வின் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் நடந்து முடிந்த முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி, வேகப்பந்து வீச்சுக்கு பெயர் போன பெர்த் மைதானத்தில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற உள்ளது.

இதில் விளையாட உள்ள வீரர்களுக்கான உத்தேச பட்டியலை இந்திய கிரிக்கெட் போர்டு வாரியம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் முதல் டெஸ்ட் போட்டியின்போது காயமடைந்த ரோகித் சர்மா இடம்பெறவில்லை. அவரை தொடர்ந்து அடிவயிற்றில் ஏற்பட்டுள்ள வலி காரணமாக முதல் டெஸ்டில் அசத்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினும் இடம்பெறவில்லை.

இருவருக்கும் பதிலாக ஜடேஜாவும் , ஹனுமா விஹாரியும் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை 5 வேகப்பந்து வீச்சாளர்கள் களமிறங்கினால், ஹனுமா விளையாட மாட்டார் என தெரிகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers