இந்திய அணியின் வெற்றிக்காக கோஹ்லி- அனுஷ்கா செய்த மிகப்பெரிய செயல்: குவியும் பாராட்டு

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தங்களுடைய சொகுசு வாய்ந்த விமானச்சீட்டை கொடுத்துவிட்டு, அவர்கள் இருவரும் சிக்கன வகுப்பில் வந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை பெர்த்தில் நடைபெறவுள்ளது.

பொதுவாக வீரர்கள் அடுத்த போட்டியில் கலந்து கொள்வதற்காக விமானத்தில் செல்லும் போது, அவர்களுக்கு உயர்தர வகுப்புகளை கொண்ட பயணச்சீட்டுகள் கொடுக்கப்படும்.

ஏனெனில் அவர்கள் விமானத்தில் பயணம் செய்யும் போது எந்தவித களைப்பையும் உணர்ந்துவிடக்கூடாது என்பதற்காக இப்படி அவர்களுக்கு சொகுசு விமான டிக்கெட் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெறவுள்ளதால், இந்திய வீரர்கள் விமானத்தில் செல்ல தயாராக இருந்தனர்.

அவர்கள் எப்போதும் போன்று பயணம் என்று நினைத்துள்ளனர், ஆனால் உயர்தர வகுப்பில் கோஹ்லி-அனுஷ்காவை தவிர மற்றவர்களுக்கு கிடைக்காததால், அவர்கள் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்ய நேரிட்டது.

ஆனால் கோஹ்லி தன் மனைவி அனுஷ்காவின் சம்மதத்தோடும், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் இரண்டு பேருக்கு அந்த உயர்தர வகுப்பு டிக்கெட்டை கொடுத்து இவர்கள், இரண்டாம் வகுப்பில் பயணம் செய்துள்ளனர்.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு வேகப்பந்து வீச்சாளர்களே முக்கிய காரணம், இதனால் அவர்கள் களைப்பில்லாமல் வந்தால், இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சாதிப்பார்கள் என்ற எண்ணத்தில் கோஹ்லி இப்படி செய்துள்ளார்.

அணியின் வெற்றிக்காக கோஹ்லியின் இந்த செயல் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers