டோனி தான் எப்பவுமே ஹீரோ: அவுஸ்திரேலியா மண்ணில் உலக சாதனை படைத்த ரிசப்பாண்ட்

Report Print Santhan in கிரிக்கெட்

டோனி தான் எப்போதும் இந்தியாவுக்கு ஹீரோ என்று இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிசப்பாண்ட் கூறியுள்ளார்.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, தற்போது அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது.

அவுஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி 10 ஆண்டுக்கு பின் அரிய வெற்றியை பதிவு செய்ததோடு, 70 ஆண்டுகளுக்கு பின் ஆவுஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டில் வெற்றி பெற்று சாதித்து காட்டியது.

இப்போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், முன்னாள் தென் ஆப்ரிக்க வீரர் டிவிலியர்சின் உலக சாதனையை சமன் செய்தார்.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 11 கேட்ச் பிடித்து இந்த உலக சாதனையை சமன் செய்தார்.

மேலும் அவுஸ்திரேலிய மண்ணில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்த மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையையும் ரிசப் பாண்ட் பெற்றார்.

இந்நிலையில் இது குறித்து ரிசப்பாண்ட் கூறுகையில், டோனி தான் இந்தியாவின் ஹீரோ. கிரிக்கெட் வீரராக அவரிடம் நான் நிறைய கற்றுக்கொண்டேன்.

எதாவது சிக்கல் இருந்தால், அதை உடனடியாக அவரிடம் கேட்டு தீர்வு பெறுவேன். நெருக்கடியான நேரத்தில் அமைதியாக இருந்து 100 சதவீதம் வெற்றிக்காக செயல்பட வேண்டும். உலக சாதனை படைப்பேன் என எதிர்பார்க்கவில்லை. ஆனால் சில மைல்கற்கள் நல்லது தான் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்