அட்டகாசமான பந்துவீச்சு! ஏழு வயது சிறுவனை பாராட்டித் தள்ளிய ஷேன் வார்னே

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்தியாவைச் சேர்ந்த ஏழு வயது சிறுவனின் பந்துவீச்சை பார்த்து வியந்து, ஷேன் வார்னே வெகுவாக பாராட்டியுள்ளார்.

காஷ்மீரை சேர்ந்த 7 வயது சிறுவன் ஒருவன், தனது நண்பர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடினான். அப்போது அவன் வீசிய பந்து ஸ்டம்ப்களுக்கு சில அடி தூரம் தள்ளிச் சென்று பிட்ச் ஆகி, பின் திசை மாறிச் சென்று ஸ்டம்ப்புகளை தாக்கியது.

இதனால் பேட்ஸ்மேன் அவுட் ஆக, அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். பந்து வீசிய சிறுவன் உற்சாக மிகுதியில் துள்ளிக் குதித்தான். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவியது.

கடந்த 1993ஆம் ஆண்டு, அவுஸ்திரேலியாவின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே வீசிய பந்து, ஸ்டம்ப்புக்கு வெளியே பிட்ச் ஆகி பின் பெரிய அளவில் சுழன்று, திசை மாறிச் சென்று ஆஃப் ஸ்டம்ப்பை பதம் பார்த்தது. இதில் எதிரணி வீரர் மைக் கேட்டிங் அவுட் ஆனார்.

வார்னேவின் இந்த பந்துவீச்சு ‘Ball of the Century’ என அழைக்கப்பட்டது. இந்நிலையில் சிறுவனின் பந்துவீச்சும் இதே போல் உள்ளதால், முஃடி இஸ்லா என்பவர் உங்களுக்கு போட்டியாக ஒருவன் வந்துவிட்டான் என வார்னேவை குறிப்பிட்டு இந்த வீடியோ பகிர்ந்தார்.

இதனை பார்த்த வார்னே, இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் ’இது மிக அற்புதம்! அருமையான பந்துவீச்சு இளைஞனே’ என அதில் சிறுவனை பாராட்டியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers