முடிஞ்சா சிக்ஸ்ர் அடி பார்க்கலாம்.. அவுஸ்திரேலியா வீரரை மீண்டும் சீண்டிய ரிஷப் பாண்ட் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பாண்ட் அவுஸ்திரேலியா வீரர்களை அடுத்தடுத்து சீண்டி வருகிறார்.

இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது.

இதில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி நிர்ணயித்த 323 ஓட்டங்களை எடுக்க முடியாமல் அவுஸ்திரேலிய அணி திணறி வருகிறது.

சற்று முன் வரை அவுஸ்திரேலியா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 252 ஓட்டங்கள் எடுத்து தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.

இந்நிலையில் இப்போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே ரிஷப் பாண்ட் அவுஸ்திரேலியா வீரர்களை சீண்டி வருகிறார்.

அவுஸ்திரேலியா அணியின் கேப்டனின் கேட்ச்சை பிடித்தவுடன், இங்கே எல்லோரும் புஜாராவாகிவிட முடியாதுஎன்று கமெண்ட் அடித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா வீரர்கள் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது, எல்லோரும் புஜாரா இல்ல, முடிஞ்சா சிக்ஸர் அடி பார்க்கலாம் என்று சீண்டினார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

மேலும் ரிஷப் பாண்ட் இப்படி தொடர்ந்து பேசுவது குறித்து போட்டி முடிந்த பின் அவுஸ்திரேலியா வீரர்கள் நடுவர்களிடம் முறையிடலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers