டோனியின் சாதனையை சமன் செய்த ரிஷாப் பண்ட்! எதில் தெரியுமா?

Report Print Kabilan in கிரிக்கெட்

அதிக கேட்ச் பிடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற டோனியின் சாதனையை, இளம் வீரர் ரிஷாப் பண்ட் சமன் செய்துள்ளார்.

அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வரும் அவுஸ்திரேலியா எதிரான டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 250 ஓட்டங்கள் எடுத்தது.

பின்னர் ஆடிய அவுஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. நேற்றைய ஆட்டநேர முடிவில் அந்த அணி 88 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில், இன்று 3ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த அவுஸ்திரேலியாவின் எஞ்சிய விக்கெட்டுகளை ஷமியும், பும்ராவும் கைப்பற்றினர். இதனால் அவுஸ்திரேலியா 235 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆகியுள்ளது.

பும்ரா வீசிய பந்தில் ஸ்டார்க்(15) விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட்யிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதேபோல் ஹெட் மற்றும் ஹேசல்வுட் ஆகியோரது கேட்ச்களையும் பண்ட் பிடித்தார்.

இதன்மூலம் ஒரே இன்னிங்சில் அதிக கேட்ச்(6) பிடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற டோனியின் சாதனையை சமன் செய்துள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் டோனி 6 கேட்ச் பிடித்து அசத்தியிருந்தார்.

AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers