களத்தில் அவுஸ்திரேலியா கேப்டனை கிண்டலடித்த கோஹ்லி-ரிஷப் பாண்ட்: வைரலாகும் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்னை இந்திய அணியின் கேப்டட்ன் கோஹ்லி மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பாண்ட் கிண்டலடித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 250 ஓட்டங்களும், அவுஸ்திரேலியா அணி 235 ஓட்டங்களும் எடுத்தது.

இதையடுத்து 15 ஓட்டங்கள் முன்னிலையுடன் இந்திய அணி தற்போது ஆடி வருகிறது.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய வீரர்கள், அவுஸ்திரேலிய வீரர்களை சீண்டிப் பார்த்தனர் என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த அளவிற்கு ஆக்ரோசமான பவுலிங் மற்றும் பந்து வீச்சு இருந்தது. இதற்கிடையில் ரிஷப் பாண்ட அவுஸ்திரேலியா வீரர் கவாஜா அவுட்டானவுடன், எல்லோரும் புஜாரா ஆகிவிட முடியாது என்று கமெண்ட் செய்தார்.

இந்நிலையில் அவுஸ்திரேலியா அணியின் கேப்டன் டிம் பெய்ன் துடுப்பெடுத்தாடிய போது, இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி மற்றும் ரிஷப் பாண்ட் அவரை கிண்டல் செய்தனர். அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers