இது நடக்கும் வரை ஓய்வை அறிவிக்கமாட்டேன்: இந்திய அணியில் அசத்தி வரும் தினேஷ் கார்த்திக்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியில் தற்போது முக்கிய வீரராக இருக்கும் தினேஷ் கார்த்திக் தமிழக அணிக்கு ரஞ்சி கோப்பை வென்று கொடுக்கும் வரை முதல் தர போட்டியிலிருந்து ஓய்வு பெற மாட்டேன் என்று அதிரடியாக கூறியுள்ளார்.

இந்திய அணி வீரரான தினேஷ் கார்த்திக் கடந்த 2004-ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமாகினார். சிறப்பாக விளையாடினாலும், டோனி வருகைக்கு பின் இவரால் அந்தளவிற்கு ஜொலிக்க முடியவில்லை.

இதனால் அவ்வப்போது இந்திய அணியில் இடம் பிடித்து வந்தார். ஆனால் தற்போது டோனி சொதப்பி வருவதால், அவருக்கு பதிலாக இளம் வீரர் ரிசப் பாண்ட மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.

இந்த இரண்டு பேரில் சிறப்பாக விளையாடும் வீரரகளே வரும் உலகக்கோப்பையில் சேர்க்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் தினேஷ் கார்த்திக் தான் சமீபகாலமாக தன்னுடைய சிறப்பான ஆட்டத்தைக் கொடுத்து வருகிறார்.

குறிப்பாக டி20 போட்டியில் நிரந்தர இடத்தை பிடித்துவிட்டார். ஆனால் ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காமல் திணறி வருகிறார்.

இந்நிலையில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் கவனம் செலுத்துவதற்காக அம்பத்தி ராயுடு சமீபத்தில் தன்னுடைய ஓய்வை அறிவித்தார்.

இதே போன்று கேள்வி தான் தினேஷ் கார்த்திக்கிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது, முதல் தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதை பற்றி நான் யோசிக்கவே இல்லை.

தமிழ்நாட்டுக்காக ஆடுவதற்காக நான் மகிழ்ச்சி கொள்கிறேன். மாநில அணிக்காக ஆடுவது மிகப்பெரிய மகிழ்ச்சி. நான் தமிழ்நாட்டு அணியில் ஆடுவதை எப்போது அணி நிர்வாகம் பாரமாக கருதுகிறதோ, அந்த நொடி நான் ஓய்வு பெற்றுவிடுவேன்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers