ரன் எடுக்க ஓடும் போது கழண்டு விழுந்த ஷூ: மோசமான ரன் அவுட்டின் வைரல் வீடியோ

Report Print Raju Raju in கிரிக்கெட்

பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் ரன் அவுட் ஆன வீடியோ வைரலாகியுள்ளது.

இந்த டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து முதலில் 274 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணியில் அசார் அலி, ஆசாத் ஷாபிக் சதம் அடித்தனர்.

எனினும், அவர்களுக்கு அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வந்தனர். அப்போது எட்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்தனர் கேப்டன் சர்ப்ராஸ் மற்றும் சுழற்பந்துவீச்சாளர் யாசிர் ஷா.

133வது ஓவரின் முதல் பந்தை சர்ப்ராஸ் சந்தித்தார். பந்தை தட்டிய சர்ப்ராஸ் இரண்டு ரன்கள் ஓடலாம் என யாசிருக்கு கூறினார்.

முதல் ரன்னை எளிதாக ஓடினர். இரண்டாவது ரன் சற்று கடினம் தான் என்றாலும் வேகமாக ஓடினால் தப்பிக்கலாம் என்ற நிலை. யாசிர் ஷா இரண்டாவது ரன் ஓடிய போது ஆட்டமிழந்தார். சர்ப்ராஸ் ஓடி முடித்து விட்ட நிலையில், யாசிரால் ஓட முடியவில்லை. ஏன் என்று பார்த்தால் யாசிர் ஷா ஷூவை தவற விட்டது தான் காரணம் என தெரிய வந்தது.

யாசிர் முதல் ரன்னை ஓடி முடித்த உடன் திரும்பிய போது அவரது ஷூ கழண்டு கொண்டது. இதனால், சில யாசிரின் வேகம் தடைபட்டது. எனினும், சமாளித்து ஷூ இல்லாமல் யாசிர் ஓடினார். அதற்குள் நியூசிலாந்து வீரர் கிராண்ட்ஹோம் ரன் அவுட் செய்து விட்டார்.

ரன் அவுட் ஆன பின் நடந்ததை உணர்ந்த கேப்டன் சர்ப்ராஸ், ஷூவினால் ஓடுவதில் பிரச்சனை என்றால் என்னை ஓட வேண்டாம் என தடுத்து நிறுத்தி இருக்கலாமே என புலம்பிக் கொண்டு இருந்தார்.

இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...