கிடைத்த வாய்ப்பை தவற விட்ட ரோகித் சர்மா: தேவையில்லாத ஷாட் அடித்து அவுட்டான வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா தேவையில்லாத ஷாட் அடித்து அவுட் ஆகி பெளலியன் திரும்பினார்.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று அடிலெய்டில் துவங்கியது. இதில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 250 ஓட்டங்கள் எடுத்தது.

இந்திய அணியில் புஜாராவைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறியதால் இந்திய அணி தடுமாறியது.

இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைக்காமல் திணறிய ரோகித் சர்மாவுக்கு அவுஸ்திரேலிய தொடரில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

ஆனால் அவர் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை என்று தான் கூற வேண்டும். 61 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் இரண்டு பவுண்டரிகள் என 37 ஓட்டங்கள் எடுத்து ஆடிக் கொண்டிருந்த போது தேவையில்லாத ஷாட் அடித்து அவுட் ஆனார்.

ரோஹித் சர்மா கவனக்குறைவுடன் விளையாடி அவுட்டான இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...