டோனியை பின்பற்றினால் கோஹ்லிக்கு வெற்றி நிச்சயம்: பாகிஸ்தான் அதிரடி வீரரின் அறிவுரை

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனியை பின்பற்றினால், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கோஹ்லியால் வெல்ல முடியும் என பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி அறிவுரை வழங்கியுள்ளார்.

வரும் 6ஆம் திகதி இந்தியா-அவுஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. முன்னதாக அவுஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தை இந்திய அணி டிரா செய்தது.

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தற்போது தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. அவுஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை, களத்தில் ஸ்லெட்ஜிங் முதல் வார்த்தை மோதல் வரை இருக்க வேண்டும் என்று அந்நாட்டு முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

AP

மேலும், அவுஸ்திரேலிய வீரர்கள் தங்களின் வழக்கமான ஆக்ரோஷத்தை காட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் இந்த டெஸ்ட் தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் ஷாகிப் அப்ரிடி அளித்துள்ள பேட்டி ஒன்றில், டோனியின் வழியைப் பின்பற்றினாலே விராட் கோஹ்லிக்கு வெற்றி நிச்சயம் என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘விராட் கோஹ்லியின் தலைமையில் அவுஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணிக்கு டெஸ்ட் தொடரை வெல்வது மிகவும் அவசியமானதாகும்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனி, சர்வதேச அளவில் இந்திய அணியின் தோற்றம் மற்றும் புகழை தனது கேப்டன்ஷிப் திறமையால் மாற்றியவர். களத்தில் எதிரணி தன்னை ஸ்லெட்ஜிங் செய்தாலும், மிகவும் கூலாக அனைத்தையும் சமாளிக்கும் தன்மை கொண்டவர் டோனி.

டோனியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றினாலே கோஹ்லிக்கு எளிதாக வெற்றி கிடைத்துவிடும். டோனியை பின்பற்றி நடக்க கோஹ்லி மிகச்சிறந்த உதாரணம். விராட் கோஹ்லியின் தனிமனித சாதனைகள், அவர் எப்படிப்பட்ட வீரர் என்பதை உணர்த்தும்.

வலை பயிற்சியில் என்ன விதமான ஆக்ரோஷத்தையும், நிதானத்தையும் கடைப்பிடிக்கிறாரோ அதை அப்படியே களத்திலும் கோஹ்லியிடம் நான் பார்க்கிறேன். கோஹ்லி தன் முன் இருக்கும் சவால்களை ஏற்றுக்கொண்டு, பொறுப்புடன் கேப்டன்ஷிப்பை செயல்படுத்த வேண்டும்.

AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers