அந்த இடத்திற்கு அவர் தான் சரி...இந்திய அணியில் தமிழனை கை கொடுத்து தூக்கிவிடும் கும்ளே

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வினை ஆறாவது இடத்தில் இறக்கிவிடலாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில்கும்ளே தெரிவித்துள்ளார்.

இந்தியா-அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 6-ஆம் திகதி அடிலெய்டில் நடைபெறவுள்ளது.

இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால், அவுஸ்திரேலிய தொடரில் நிச்சய வெற்றியை நோக்கி உள்ளது.

டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பதற்கு போராடி வந்த ரோகித் சர்மாவுக்கும் இந்த தொடரில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அப்படி வாய்ப்பு கொடுக்கப்பட்டால், இவர் 6-வது வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது.

அதே சமயம் மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பண்ட் 6-ஆம் வரிசையில் களமிறங்கி சிறப்பாக ஆடினார்.

இதனால் அவுஸ்திரேலியா தொடரில் 6-ஆம் வரிசையில் யார் களமிறக்கப்படுவார் என்ற குழப்பம் நீடிக்கிறது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான அனில்கும்ளே, அவுஸ்திரேலியாவில் 6-ஆம் வரிசைக்கு ரிஷப் பண்ட் சரியாக வரமாட்டார்.

அஷ்வினை 6-ஆம் வரிசையில் களமிறக்கலாம். ஏனெனில் அவுஸ்திரேலியாவில் அந்த இடத்தில் அவரால் சிறப்பாக ஆடமுடியும்.

குறிப்பாக வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் அஷ்வின் 6-ஆம் வரிசை வீரராக சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன்.

இங்கிலாந்தில் கூட அஷ்வின் சிறப்பாக துடுப்பெடுத்தாடினார். அஷ்வினின் துடுப்பாட்ட முறையும் நன்றாக இருக்கிறது என்பதால் அவரை களமிறக்கலாம் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers