அவுஸ்திரேலியாவை ஆதரிப்பேன் என்று கூறினேனா? ஆத்திரமடைந்த ஹர்பஜன் சிங்

Report Print Kabilan in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய அணியை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பேன் என்று நான் பதிவிட்டதாக வெளியான ட்வீட் போலியானது என ஹர்பஜன் சிங் கண்டனமும், வேதனையும் தெரிவித்துள்ளார்.

வரும் 6ஆம் திகதி தொடங்க அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில், தொடக்க வீரராக ரோஹித் ஷர்மா களமிறங்குவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், ஹர்பஜன் சிங் பதிவிட்டதாக வெளியான ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ட்வீட்டில் ‘அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரோஹித் ஷர்மாவை தெரிவு செய்யாவிட்டால், நான் கண்ணை மூடிக்கொண்டு அவுஸ்திரேலிய அணியைத் தான் ஆதரிப்பேன்’ என பதிவிடப்பட்டிருந்தது.

தற்போது ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஹர்பஜன் சிங், துடுப்பாட்ட வீரர் ரோஹித் ஷர்மா குறித்து தான் பதிவிட்டது போன்ற ட்வீட் போலியானது எனக் கூறியுள்ளார்.

மேலும் அந்த ட்வீட்டில் ரோஹித் ஷர்மாவின் புகைப்படமும் இருந்ததைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் இது வைரலாக பரவியது. இந்நிலையில் இதுதொடர்பாக ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘என்னைப் பற்றியும், நான் கூறியதாக வரும் சமூக ஊடகங்களில் வரும் செய்திகள் போலியானவை. யார் இப்படி போலியான செய்திகளைப் பரப்புகிறார்கள் என எனக்கு தெரியாது.

நான் கூறியது போல் இதுபோன்ற முட்டாள்தனமான கருத்துக்களை எப்படி பதிவிடுகிறார்கள். அனைத்தையும் நிறுத்திவிடுங்கள். இந்தியாவைச் சேர்ந்து ஆதரிப்போம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers