கோஹ்லி படைக்கு இது ஒரு நல்ல சான்ஸ்..இப்போ முடியலைனா அவ்வளவு தான் என கூறும் அவுஸ்திரேலிய வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய அணியில் ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாததால், இதை இந்திய அணி சரியாக பயன்படுத்தி தொடரை வெல்ல வேண்டும், அப்படி இல்லையென்றால் இந்திய அணியால் அடுத்து எப்போதும் அவுஸ்திரேலியா தொடரை வெல்ல முடியாது என்று அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் கூறியுள்ளார்.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

அவுஸ்திரேலிய அணி சமீபகாலமாக ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாத காரணத்தினால் தடுமாறி வருகிறது. அதுமட்டுமின்றி தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால், இந்திய அணியை வீழ்த்தி அதற்கு முற்றுப் புள்ளி வைக்க முயற்சி செய்யும்.

இந்நிலையில் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான டீன் ஜோன்ஸ் கூறுகையில், ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாத அவுஸ்திரேலிய அணியை பலவீனமான அணியாகவே பார்க்கிறேன்.

வலுவான இந்திய அணியை வீழ்த்தும் அளவிற்கு தற்போதைய அவுஸ்திரேலிய அணியை திறமை வாய்ந்த அணியாக கருதவில்லை.

ஸ்மித்தும் வார்னரும் அவுஸ்திரேலிய அணியின் ரன்களில் 40 சதவீத பங்களிப்பை அளித்துவிடுவர். அப்படியான வீரர்கள் யாரும் இப்போது இல்லை.

எனவே ஸ்மித்தும் வார்னரும் இல்லாத வாய்ப்பை பயன்படுத்தி இந்திய அணி அவுஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்லும் என்று நம்புகிறேன்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி தொடரை வெல்லாவிட்டால் இனிமேல் இந்திய அணியால் எப்போதுமே அவுஸ்திரேலியாவில் தொடரை வெல்ல முடியாது. ஆனால் இந்திய அணி 2-0 அல்லது 3-0 என தொடரை வெல்லும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers