இங்கிலாந்து அணியுடன் அற்புதமான ஆட்டத்தை வெளிபடுத்திய இலங்கை வீரர்: தரவரிசைப்பட்டியலில் அதிரடி முன்னேற்றம்

Report Print Santhan in கிரிக்கெட்

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இலங்கை அணி வீரர் குசால் மெண்டிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், தரவரிசைப் பட்டியலில் 20-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி, இங்கு மூன்று வித போட்டிகளில் விளையாடி மூன்று தொடரையும் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.

டெஸ்ட் தொடரை 3-0 என்று கைப்பற்றிய இங்கிலாந்து அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அதுமட்டுமின்றி ஆசிய கண்டத்தில் மூன்று தொடரையும் இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளதால், அந்தணி வீரர்கள் இந்த வெற்றியை அற்புதமாக கொண்டாடினர்.

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடர் துவங்குவதற்கு முன்பு ஐசிசி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப்பட்டியலில் இலங்கை வீரர் குசால் மெண்டிஸ் 28-வது இடத்தில் இருந்தார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 178 ஓட்டங்கள் குவித்ததன் மூலம் டெஸ்ட் வீரர்களுக்கான புள்ளிகள் பட்டியலில் 627 புள்ளிகளைப் பெற்று 8 இடங்கள் முன்னேறி தற்போது 20-வது இடத்தை பிடித்துள்ளார்.

மேலும் இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் 256 ஓட்டங்களைக் குவித்து அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் 2- ஆவது இடத்தைப் பெற்ற இலங்கை அணியின் துவக்க வீரர் திமுத் கருணாரத்ன டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து 7-ஆவது இடத்திலும், இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால் 11-ஆவது இடத்திலும் நீடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers