மிதாலி ராஜிற்காக வருந்துகிறேன்- கவாஸ்கர் கவலை

Report Print Kavitha in கிரிக்கெட்

சமீபத்தில் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட அனுபவ வீராங்கனை மிதாலி ராஜிற்காக நான் வருந்துகிறேன் என்று கவாஸ்கர் தனது கவலையை தெரிவித்துள்ளார்.

இது குறித்து இவர் கூறுவதாவது,

‘‘நான் மிதாலி ராஜிற்கான வருந்துகிறேன். அவர் சிறந்த வீராங்கனை. கடந்த 20 ஆண்டுகளாக அவர் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.

உலகக்கோப்பையில் அதிக ரன்கள் குவித்தார். இரண்டு போட்டியிலும் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

அவர் ஒரு போட்டியில் காயம் அடைந்த போதிலும், அடுத்த போட்டிக்கு தகுதி பெற்றார். இதை அப்படியே ஆண்கள் அணியுடன் ஒப்பிட்டு பார்த்தோம் என்றால், விராட் கோலி ஒரு போட்டியில் காயம் அடைந்து, அதன்பின் உடற்தகுதி பெற்று அடுத்த போட்டிக்கு தயாரானா், அவரை நீங்கள் நீக்கி விடுவீர்களா?

நாக்அவுட் போட்டியில் நீங்கள் சிறந்த வீரர்களை களம் இறக்க வேண்டும். அனுபவம் வாய்ந்த மிதாலி ராஜ் ஆட்டம் அணிக்கு முக்கியமானது.

ரமேஷ் பவார் உடன் என்ன நிகழ்ந்தது என்பது குறித்து இங்கிருந்து கருத்து கூறுவது மிகக்கடினம். ஆனால் , எந்தவொரு காரணமாக இருந்தாலும் அவரை நீக்கியதை ஏற்றுக் கொள்ள முடியாது.

மிதாலி ராஜ் இல்லாத 11 பேர் கொண்ட அணியில் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது.

இது சரியான காரணம் என்று என்னால் நினைக்க இயலவில்லை. மிதாலி ராஜ் போன்ற ஒருவரை நீக்கக்கூடாது’’ என்று தெரிவித்திருந்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers