விராட் கோஹ்லியின் விக்கெட்டை அசால்டாக வீழ்த்திய 19 வயது இளம்வீரர்: வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in கிரிக்கெட்

விராட் கோஹ்லியின் விக்கெட்டை 19 வயது இளம் அவுஸ்திரேலிய வீரர் வீழ்த்திய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக உருவெடுத்து வருகிறார்.

அவரின் விக்கெட்டை வீழ்த்துவதை பெரிய விடயமாகவே எதிரணியினர் நினைக்கிறார்கள்.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இந்தியா - அவுஸ்திரேலிய அணிகள் இடையில் நான்கு நாள் பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த பயிற்சிப் போட்டியில் 19 வயதான அவுஸ்திரேலிய வீரர் ஆரோன் ஹார்டி, கோஹ்லிக்கு பந்துவீசினார். அப்போது அவர் 64 ரன்கள் அடித்து ஆடி வந்தார். ஹார்டி வீசிய ஒரு பந்தை நேராக அடித்தார் கோஹ்லி

பந்து நேராக ஹார்டி வசம் சென்றது. ஹார்டி எளிதாக அதை கேட்ச் பிடித்து அசத்தினார். கோஹ்லி போன்ற உலகின் சிறந்த வீரரை ஆட்டமிழக்கச் செய்து விட்டோம் என்ற எந்த ஆரவாரமும் இல்லாமல் எளிமையாக அந்த விக்கெட் வீழ்ச்சியை கொண்டாடினார்.

இது சம்மந்தமான வீடியோ சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...