பிடித்த அணியாக இருக்க வேண்டுமா? மதிக்கின்ற அணியாக இருக்க வேண்டுமா? கொந்தளித்த அவுஸ்திரேலிய முன்னாள் கேப்டன்!

Report Print Kabilan in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியினரின் ஒழுக்கக் கட்டுப்பாட்டு விதிகளை, முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

அதனைத் தொடர்ந்து, கிரிக்கெட் அவுஸ்திரேலியா சில ஒழுக்கக் கட்டுபாடுகளை களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அணி வீரர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று கட்டளையிட்டது. இதனை பயிற்சியாளர் லாங்கரும், அணித்தலைவர் டிம் பெய்ன்-வும் செயல்படுத்தினர்.

எனினும், தற்போதைய அவுஸ்திரேலிய அணி வெற்றிகளை பெற திணறி வருகிறது. இந்நிலையில் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் மைக்கேல் கிளார்க், கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் ஒழுக்கக் கட்டுப்பாடு குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

அத்துடன், அனைவருக்கும் பிடித்த அணியாக இருக்க வேண்டுமா அல்லது அனைவரும் மதிக்கக் கூடிய அணியாக இருக்க வேண்டுமா? என பயிற்சியாளர் லாங்கர், கேப்டன் டிம் பெய்ன் ஆகியோருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், ‘அவுஸ்திரேலிய கிரிக்கெட், தங்களை பிறர் விரும்புகிறார்களா இல்லையா என்ற கவலையை விட்டு விட வேண்டும்.

மாறாக, நம் அணியை மதிக்க வேண்டும் என்பது பற்றிய கவலையே உண்மையான கவலை. உங்களுக்குப் பிடித்திருக்கிறதோ, இல்லையோ கடினமான முறையில் ஆடுவதுதான் அவுஸ்திரேலிய பாணி. அதுதான் நம் ரத்தத்தில் கலந்துள்ளது.

அவுஸ்திரேலிய பாணியிலிருந்து வெளியேறினால், உலகில் மற்ற அணிகளுக்கு நம்மைப் பிடிக்கும். அடுத்தவருக்கு பிடித்தமான அணியாக இருப்போம்.

ஆனால் வெற்றி பெற மாட்டோம். சத்தியமாக வெல்லப்போவதில்லை. எல்லோரும் வெற்றியையே விரும்புகின்றனர்’ என விமர்சித்துள்ளார்.

PTI

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers