100 டி20 போட்டிகளில் விளையாடிய முதல் அவுஸ்திரேலிய வீராங்கனை

Report Print Kabilan in கிரிக்கெட்
53Shares

அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை எல்லிசி பெர்ரி 100 டி20 போட்டிகளில் விளையாடிய முதல் அவுஸ்திரேலிய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

மேற்கிந்திய தீவுகளில் மகளிர் டி20 போட்டிகளில் நடைபெற்று வருகின்றன. நேற்றைய போட்டியில் இந்தியா-அவுஸ்திரேலியான அணிகள் மோதின. இதில் இந்திய அணி 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டி அவுஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் வீராங்கனை எல்லிசி பெர்ரிக்கு 100வது போட்டியாகும். இதன்மூலம், நூறு டி20 போட்டிகளில் விளையாடிய முதல் அவுஸ்திரேலிய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

ஒருநாள் போட்டிகளில் பேட்டிங் தரவரிசையிலும், ஆல்-ரவுண்டர் தரவரிசையிலும் எல்லிசி பெர்ரி முதலிடம் வகிக்கிறார். அத்துடன் டி20யில் அதிக விக்கெட்டுகளை(97) வீழ்த்திய வீராங்கனையும் எல்லிசி பெர்ரிதான்.

நேற்றைய போட்டியில் அவுஸ்திரேலிய அணி தோல்வியுற்றாலும், எல்லிசி பெர்ரி 28 பந்துகளில் 39 ஓட்டங்கள் எடுத்தார். மேலும் பந்துவீச்சிலும் அசத்திய எல்லிசி 16 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்