அவுஸ்திரெலியா அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரே ஒரு டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர் ரபாடா பவுலிங் செய்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி அங்கு மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரே ஒரு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என்ற முன்னிலையில் தென் ஆப்பிரிக்கா வென்றது.
இதையடுத்து நேற்று நடைபெற்று ஒரே ஒரு டி20 போட்டியிலும் அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில் இப்போட்டியில் அவுஸ்திரேலியா அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது, தென் ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா, மேக்ஸ்வேலுக்கு பந்து வீசினார்.
BALLLLL
— Aditya Adapa || 9394022222 (@BezawadaAditya) November 17, 2018
RABADA KE BALLLLLLLLLLL 🤣🤣 #AUSvSA #RABADA pic.twitter.com/6Pf0juks01
அப்போது பந்தானது துடுப்பாட்ட வீரருக்கு செல்லாமல், ஆப் திசையில் பீல்டிங் நின்று கொண்டிருந்த வீரருக்கு சென்றது.
இதைக்கண்ட மேக்ஸ்வெல், தென்னாப்பிரிக்க வீரர்கள் மற்றும் நடுவர்கள் அனைவரும் மிரண்டு போயினர். பின்னர் நீண்ட நேர ஆலோசனைக்கு பிறகு நடுவர்கள், அந்த பந்தை செல்லாது என அறிவித்தனர். அதன்பின்னர் அதற்கு ரீ-பால் வீசப்பட்டது.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.