ஒருநாள் போட்டியில் புதிய சாதனை படைத்த ரோஹித் ஷர்மா!

Report Print Kabilan in கிரிக்கெட்

மும்பையில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் 162 ஓட்டங்கள் குவித்ததன் மூலம், அதிகமுறை 150 ஓட்டங்களுக்கு மேல் அடித்த வீரர் என்ற சாதனையை ரோஹித் ஷர்மா படைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ரோஹித் ஷர்மா, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் 162 ஓட்டங்கள் குவித்தார்.

இதன்மூலம், ஒருநாள் போட்டிகளில் 7 முறை 150 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்பு இந்திய முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் தலா 5 முறை இதனை செய்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவின் ஹசிம் ஆம்லா, மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெய்ல், இலங்கையின் ஜெயசூர்யா மற்றும் இந்தியாவின் விராட் கோஹ்லி ஆகியோர் தலா 4 முறையும் 150 ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ளனர்.

ரோஹித் ஷர்மா 162 ஓட்டங்கள் குவித்ததன் மூலம், தொடர்ந்து 6வது ஆண்டாக ஒரு இன்னிங்சில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

இதற்கு முன்பு விராட் கோஹ்லி கடந்த பிப்ரவரி மாதம், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 160 ஓட்டங்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

AP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...