இந்திய வீரர் தவானை அவுட்டாக்கி அவரைப் போன்றே கொண்டாடிய மேற்கிந்திய தீவு வீரர்: வெளியான வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் தவானை அவுட்டாக்கியவுடன், மேற்கிந்திய தீவு வீரர் தவானைப் போன்று கொண்டாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவு அணிகளுக்கிடையேயான நான்காவது ஒருநாள் போட்டி மும்பையில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போட்டியின் போது இந்திய வீரர் தவானின் விக்கெட்டை வீழ்த்திய மேற்கிந்திய தீவு வீரர் கீமோ பால், தவான் பாணியிலேயே அவரது விக்கெட்டை கொண்டாடி வழியனுப்பி வைத்தார்.

தவான் பொதுவாக கேட்ச் பிடித்துவிட்டால், தொடையை தட்டி கொண்டாடுவார். அதேபோல தவானின் விக்கெட்டை வீழ்த்தியதும் அவரைப்போலவே தொடையை தட்டி கொண்டாடினார் கீமோ பால். அதை பார்த்து தவான் சிரித்துக்கொண்டே வெளியேறினார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers