ஸ்டம்பிங்கில் கிங் என்பதை நிரூபித்த டோனி! மேற்கிந்திய தீவு வீரரை மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் டோனி செய்த மின்னல் வேக ஸ்டம்பிங் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவு அணி தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கிடையேயான நான்காவது ஒருநாள் போட்டி இன்று மும்பையில் நடைபெற்றது.

இப்போட்டியில் இந்திய அணி 224 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என்று முன்னிலை வகிக்கிறது. இதில் இரண்டாவது ஒருநாள் போட்டி டிரா ஆன நிலையில், இரு அணிகளுக்கிடையேயான இறுதி மற்றும் ஐந்தாவது ஒருநாள் போட்டி வரும் 1-ஆம் திகதி நடைபெறவுள்ளது.

வீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்...

இந்நிலையில் இன்று நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் டோனி மின்னல் வேக ஸ்டம்பிங் செய்துள்ளார். ஆட்டத்தின் 28-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா வீச, அதை மேற்கிந்திய தீவு வீரர் கீமோ பால் சற்று கிரீசுக்கு வெளியே சென்று தடுத்தாட முற்பட, ஆனால் பந்தானது டோனியிடம் சென்றதால், அதை பிடித்த வேகத்தில் டோனி ஸ்டம்பிங் செய்தார்.

டோனி மீது பேட்டிங்கில் பல விமர்சனங்கள் இருந்தாலும், கீப்பிங்கில் தற்போது வரை அசத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers